ஆதிமுதலாய் அப்படியிருக்காதவைகள் Beaumont, Texas, USA 61-0119M 1... அவருடைய நாட்களைக் குறித்து, அப்படியில்லாத காரியங்களைப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் இன்று வந்திருப்பாராயின், அதே காரியத்தையே: ஆதிமுதலாய் அப்படியிருக்காத காரியங்களைக் கண்டிருப்பார் என்று நினைக்கிறேன். சத்தியம் என்னவென்று அறிய எப்போதுமே நீங்கள் விரும்புவீர்களானால், ஆதிக்குத் திரும்பிச் செல்லுங்கள். ஆதியாகமத்திற்குத் திரும்பிச் சென்று, இன்றைய தினத்திலிருந்து வந்திருக்கும் ஒவ்வொரு சமயக்கோட்பாட்டு முறைகளையும், ஒவ்வொரு சத்தியத்தையும் உங்களால் எடுக்க முடியும். அப்படியே... தாவரங்கள் எல்லாமே ஆதியாகமத்தில் தான் துவங்கினது, ஏனென்றால் ஆதியாகமம் என்பது வேதாகமத்தினுடைய மூல அதிகாரமாக உள்ளது. எது சரியென்று நாம் அறிந்து கொள்ள விரும்பினால், துவக்கத்திலிருந்து திரும்பிச் செல்லுங்கள். நான் சென்ற இரவு கூற முயற்சித்துக் கொண்டிருந்தது போன்று, தேவன் ஒருமுறை ஒரு வாக்குமூலத்தை கொடுக்கும் போது, அவர் ஒருபோதும் அந்த வாக்குமூலத்திலிருந்து மாறவே முடியாது. துவக்கத்திலிருந்து முடிவு மட்டுமாக அவர் அதைக் காத்துக்கொள்ள வேண்டும். அவர் ஆதியாகமத்தில் என்ன கூறினாரோ, வெளிப்படுத்தின விசேஷத்திலும் அதே காரியம் தான், துவக்கத்திலிருந்து முடிவு மட்டுமாக அதே காரியம் தான். அவர் தேவனாக இருக்கிறார், அவ்வளவு தான். பாருங்கள்? அவருடைய வார்த்தைகள் எல்லாம் உண்மையாக உள்ளன. 2இப்பொழுது, இயேசு வந்த போது, நாம் அதைக் கண்டுகொள்கிறோம், தேவனுடைய வார்த்தையை எடுத்து, அதை தங்களுக்கு ஏற்றபடி புரட்டின போதகர்களை அவர் கண்டார். அவர்கள் தேவனுடைய கற்பனைகளை எடுத்து, அதை ஒரு சமயக்கோட்பாட்டுக்குள் புரட்டிப் போட்டார்கள். இப்பொழுது, அங்கே ஒரே ஒரு சிருஷ்டிகர் தான் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள், மற்றும் எல்லாமும்... சாத்தான் ஒரு சிருஷ்டிகன் அல்ல. பாவம் என்பது என்ன? பாவம் என்பது 'அநியாயமாயுள்ளது,' மேலும் அநியாயம் என்பது 'நீதி தாறுமாறாக்கப்பட்டதாகும்.' ஒருக்கால் நான் அதைத் தெளிவாக்குகிறேன். அவர்கள்... நீங்கள் ஆண்களும் பெண்களும் கலந்த (mixed) ஒரு கூட்டமாக இருக்கிறீர்கள். உங்களுடைய மருத்துவர் சொல்லுவதை நீங்கள் கேட்கிறீர்கள்; நானோ உங்கள் சகோதரன். ஒரு மனிதன் தன்னுடைய மனைவியுடன் வாழ்வது நீதியான காரியமாகும். அவன் அவளை விவாகம் செய்துள்ளான். அதே காரியத்தை வேறொரு பெண்ணோடு செய்வது மரணமாக உள்ளது. ஒன்று ஜீவனைக் கொண்டு வருகிறது, மற்றதோ மரணத்தைக் கொண்டு வருகிறது. புரிகிறதா? அநீதி என்பது 'நீதி தாறுமாறாக்கப்படுவதாகும்.' பொய் என்பது என்ன? 'சத்தியத்தைத் தவறாக மேற்கோள் காட்டுவது.' எனவே இயேசு அதைத்தான் கண்டார். நாமெல்லாம் எதற்குள் போவோம் என்றால், நாம் தேவனுடைய வார்த்தையிலிருந்து எடுக்கவோ, அதோடு சேர்க்கவோ, அல்லது எடுத்துப்போடவோ செய்யும் காலம் வரையில், அது தேவனுடைய வார்த்தையை தாறுமாறாக்குவதாகும். எனவே இயேசு வந்த போது, அவர்கள் தேவனுடைய வார்த்தையை எடுத்து, அதைத் தாறுமாறாக்கிப் போட்டு, மனுஷருடைய பாரம்பரியமாக ஆக்கிப் போட்டதைக் கண்டார். அவர், 'உங்களுடைய பாரம்பரி-... ஐக் கொண்டு, ஏன் தேவனுடைய வார்த்தையை மாற்றிப் போட்டீர்கள்' என்று கேட்டார். அவர்களுடைய பாரம்பரியங்களை ஏற்றுக்கொண்டு, தேவனுடைய வார்த்தையை மாற்றிப்போட்டதன் மூலமாக உண்மையில் அது சொல்லாத ஏதோவொன்றை சொல்லும்படி செய்தார்கள். 3அவர் அவருடைய நாளில் அதைக் கண்டிருப்பாரானால், இன்றைக்கும் அவர் இங்கே அதைக் காண்பார் என்பதை நாம் கண்டுகொள்கிறோம். அவரிடம், பிரசன்னத்தில், அல்லது, பரிசுத்த ஆவியானவராகிய நபருக்குள், எப்போதும் இருக்கிற அதே தேவன் தான், பரிசுத்த ஆவியானவருடைய ரூபத்தில் தம்முடைய ஜனங்களுக்குள் வாசம் செய்து கொண்டிருக்கிறார், அது உண்மையாக விசுவாசி மூலமாக சாட்சி பகரப்படுகிறது, மனிதனோ தேவனுடைய வார்த்தைக்குப் பொருந்தும்படி தங்கள் கோட்பாடுகளை உண்டாக்கிக்கொள்வதற்குப் பதிலாக, தங்களுடைய கோட்பாடுகளுக்கு ஏற்றபடி தேவனுடைய வார்த்தையை புரட்டிப் போடுகிறார்கள். நாம் அப்போஸ்தல பிரமாணத்தை இன்று, 'பரிசுத்த கத்தோலிக்க சபையை விசுவாசிக்கிறேன், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை (புனிதர்களின் ஐக்கியத்தை) விசுவாசிக்கிறேன்' என்று கூறுகையில், யாராவது ஒருவர் வேதாகமத்தில் அப்போஸ்தல பிரமாணத்தை (Apostles' Creed) கண்டுபிடிக்கும்படி விரும்புகிறேன். மரித்தவர்களுடன் பேசுகிற எதுவும் மரித்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ளுதலாக (spiritualism) இருக்கிறது. 'தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே, அவர் தான் கிறிஸ்து இயேசுவாகிய மனிதர்.' அவ்வளவு தான். அங்கே வேறு எந்த மத்தியஸ்தரும் இல்லை. எனவே... எதுவும். அவர்கள் காரியங்களைத் தாறுமாறாக்கி, ஒரு அப்போஸ்தல பிரமாணத்தை உண்டாக்கிக் கொள்கிறார்கள். அப்போஸ்தலர்களுக்கு ஏதாவது பிரமாணம் இருந்திருக்குமென்றால், அது அப். 2:38 தான். அவன்-அவன் கொண்டிருந்தான்... அதைத்தான் அவர்கள் தொடர்ந்து பிரசங்கித்து, ஜனங்களுக்குள் அதை ஏற்படுத்தினர். அவர்கள் நிச்சயமாக தேவனிடம் மனந்திரும்பியும் மற்றவற்றையும் செய்தாக வேண்டும். அதாவது, அங்கே வேதாகமத்தில் ஏதாவது பிரமாணம் இருந்து, அது பிரமாணமாக இருக்கும் என்றால், அது அப்போஸ்தலர்கள் உபயோகித்த அதுவாகத்தான் இருக்கிறது. 4எனவே அவர்கள்... அவர்களுடைய எல்லா பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதல்களும் வார்த்தையோடு தரித்திருந்தது. எந்த மனிதனாவது, எந்த தூதனாவது, எப்பொழுதாவது வார்த்தைக்கு முரணான எதையாவது கூறுவான் என்றால், 'அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்' என்று கலாத்தியர் 1:8 கூறுகிறது. அது நிச்சயமாக தேவனுடைய வார்த்தையாக இருந்தாக வேண்டும். 'வானத்திலிருந்து வந்த ஒரு தூதன் நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கிறதைக் காட்டிலும் வேறு எந்த சுவிசேஷத்தோடாவது உங்களிடம் வந்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்' என்று பவுல் கூறுகிறான். எனவே வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், தேவனுடைய வார்த்தையோ ஒழிந்து போகாது என்பதை நாம் விசுவாசிக்கிறோம், ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாக உள்ளது. தேவனால் ஒழிந்து போக முடியாது. சிருஷ்டி ஒழிந்து போகும், ஆனால் தேவனால் ஒழிந்து போக முடியாது. 5எந்த இடமும் நகைச்சுவை பேசுவதற்கான இடமல்ல, பிரசங்க பீடமானது நகைச்சுவைகளைப் பேசுவதற்கான இடமல்ல. தேவனுடைய வார்த்தையானது இங்கிருந்து உத்தமமான இருதயத்தைக் கொண்டு பிரசங்கிக்கப்பட வேண்டும், நாம் அதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் வெறுமனே அதைக் கூறும்போது, இந்த முக்கிய விஷயத்தைச் சுட்டிக்காட்டும்படியாக இதைக் (கூறுகிறேன்), இங்கே தெற்கில் எங்கோ ஓரிடத்திலுள்ள வயதான கறுப்பின மனிதன், ஒரு சமயம் ஒரு காரியத்தைக் கூறினான், அவன், 'அவன் வானத்தில் (Heaven) நின்று கொண்டிருப்பதைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தையின் பேரில் சற்று அதிகமாக நின்றதாகக்' கூறினான். ஏனென்று அவர்கள் அவனிடம் கேட்டார்கள். அவன், 'ஏனென்றால் வானமும் (Heaven) பூமியும் இரண்டும் ஒழிந்து போகும், தேவனுடைய வார்த்தையோ ஒழிந்து போகாது' என்றான். அது சரியே. நாம் வார்த்தையில் தரித்திருக்க வேண்டும். 6இயேசு தாம் வந்த போது, அவர், 'உங்கள் மனைவியைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக் கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தான்: ஆனால் ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை' என்றார். இப்பொழுது அவர்கள் தேவனுடைய கற்பனைகளை எடுத்து, அவைகளை அவமாக்கியிருந்ததை நாம் கண்டுகொள்கிறோம். இயேசு வந்த போது, இரட்சிப்புக்காக ஜனங்கள் சபையையே எதிர்நோக்கிக்கொண்டிருந்தார்கள் என்பதை அவர் கண்டுகொண்டார். அவர்களுக்கு என்ன கிடைத்தது? கோட்பாடுகள்; ஒவ்வொரு ஸ்தாபனமும் அதற்கு சொந்தமான கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்கின்றன. அப்போது ஜனங்கள் இரட்சிப்புக்காக சபையைத் தான் சார்ந்திருந்தார்கள் என்பதை அவர் கண்டுகொண்டார்; அவர்கள் மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளை கண்டுகொண்டனர். அவர் இன்று ஒரு மனிதனாக வந்து, நம்மிடம் பேசுவாரானால், அவர் அதே காரியத்தையே கண்டுபிடிப்பார்: மனிதன் தங்களுடைய ஸ்தாபனத்திற்கு ஏற்றபடி தேவனுடைய வார்த்தையை உண்டாக்கிக் கொண்டு, அவர்களுக்கு கோட்பாடுகளையே கொடுக்கிறார்கள். ஒரு கோட்பாடு வேதாகமத்தில் இல்லாவிட்டால், அந்தக் கோட்பாட்டில் எந்த இரட்சிப்பும் கிடையாது. அது வேதாகமமாக இருந்தாக வேண்டும், ஏனென்றால் அவருடைய வார்த்தையானது... நமக்குத் தேவையானது எல்லாமே அவருடைய வார்த்தை தான். அவருடைய வார்த்தை, அவர் வார்த்தையாக இருக்கும் போது, தேவனுடைய வார்த்தையே தேவனாக இருக்கிறது. அவ்வளவு தான். அது அவருடைய வார்த்தையாக உள்ளது, அவர்தாமே. அவர்... 'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.' அந்த வார்த்தை இன்னும் தேவனாகவே உள்ளது. அது இன்னும் தேவனாக இருக்கிறது. இப்பொழுது, அவர் வந்த போது, அப்போது மனிதர்கள் தேவனுடைய கற்பனைகளை எடுத்துக்கொண்டு, அவைகளை அவமாக்கிக் கொண்டிருந்ததையும், தேவனுடைய கற்பனைகளை எடுத்துக்கொண்டு, அவர்களுடைய கோட்பாடுகளுக்கு இசைந்து போகும்படியாக அவர்கள் அதை பொருத்திவிட்டனர், எனவே அது அவமாய்ப் போய் விட்டது. சபையானது எதிர்நோக்கி... ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை நோக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக சபையை நோக்கிப் பார்த்தனர். ஆகையால், அவர், 'ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை' என்றார். 7இன்றும் நாம் அதே காரியத்தையே கண்டுகொள்கிறோம், நான் ஏற்கனவே இரண்டு மூன்று முறை அதை மேற்கோள் காட்டி, அந்தக் கடிகாரத்தையே கவனிக்கையில், அது என்னை பதட்டமாக ஆக்குகிறது, என்றாலும் 'இது உண்மை' என்று நான்-நான் கூற விரும்புகிறேன். அப்படியானால், அது இப்பொழுது இருக்கிறது போலவே, அந்நாளிலும் இருந்தது, அது அப்போது இருந்தது போலவே இப்பொழுதும் இருக்கிறது, அவர்கள் 'தேவன் எங்கே?' என்று உரக்கக் கத்தினார்கள். நல்லது, அதே காரியம் தான், அவர்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு விட்ட போது, அவர்கள் தேவனையும் விட்டு விட்டார்கள். ஆகையால் தான் நாம் இன்று செய்யும் விதமாக காரியங்களைச் செய்திருக்கிறோம், அதற்குக் காரணம் என்னவென்றால், ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு விட்டார்கள். ஒரு மருத்துவர் ஒரு மருந்துச்சீட்டை, மருந்தை எழுதி விட்டு, நீங்கள் அதனோடு எதையாவது சேர்த்தாலோ, அல்லது அதிலிருந்து ஏதோவொன்றை எடுத்துப் போட்டாலோ, நீங்கள் உங்களுடைய நோயாளியைக் கொன்று போடுவீர்கள். அது சரியே. அது எழுதப்பட்டிருக்கிற விதமாகவே நீங்கள் அதை வைத்திருக்க வேண்டும். விஷத்தை செயலிழக்கச் செய்ய போதுமான மாற்று மருந்து அங்கே அதில் உண்டு, அந்தக் கிருமியைக் கொன்று போட போதுமான விஷம் அதிலுள்ளது. மாற்று மருந்து இல்லாமல், அதில் மிக அதிக விஷம் இருக்குமானால் அது அந்த நோயாளியைக் கொன்று போடும்; மேலும்-மேலும் விஷமில்லாமல் மிக அதிக மாற்று மருந்து இருந்தால், அது என்ன செய்யும்? அது உங்களுடைய நோயாளிக்கு உதவி செய்யாது. எனவே நீங்கள் அதை சரியாக வைத்திருக்க வேண்டும். 8அந்தவிதமாகத்தான் தேவனுடைய வார்த்தையும் இருக்கிறது. அது தேவனுடைய மருந்துச்சீட்டாக உள்ளது. ஆமாம், சகோதரனே. அது ஒவ்வொரு வியாதியையும், ஒவ்வொரு நோயையும் குணப்படுத்தும்படியாக தேவனுடைய ஜனங்களுக்கான அவருடைய மருந்துச்சீட்டாக உள்ளது. பாவமாக இருந்தாலும், சரீர சம்பந்தமுள்ளதாக இருந்தாலும், அது ஒருக்கால் என்னவாகவும் இருக்கலாம், அவை எல்லாமே தேவனுடைய வார்த்தையில் பொருந்துகிறது. ஆமென். அது தேவனுடைய வார்த்தையாக உள்ளது. ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை; இடைப்பட்ட காலத்திலும் அப்படியிருக்கவில்லை; அது ஒவ்வொரு காலத்திலும் அவ்வண்ணமாகவே இருக்கிறது; அவர் அதை உரைத்த போது இருந்ததைப் போலவே அதேவிதமாக இந்தக் காலையிலும் இருக்கிறது, ஏனென்றால் அணுவளவும் அது மாற முடியாது, ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாக உள்ளது. அப்படியானால் இன்று ஜனங்கள், 'அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. தெய்வீக சுகமளித்தல் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது' என்று சத்தமிடுவதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு, அவர்களுடைய கோட்பாட்டை அதைச் சுற்றிலும் மூடி, அவர்கள் அந்தக் காரியத்தை தவறாகக் கலந்து விட்டிருந்தார்கள். அங்கே அதில் அவர்கள் எந்த வல்லமையும் பெற்றிருக்கவில்லை. ஒரு தூதனோ, ஒரு பிஷப்போ, ஒரு பேராயரோ (archbishop), அது என்னவாயிருந்தாலும், அவன் வந்து, ஒரு வார்த்தையை மாற்றிப் போடுவான் என்றால், அது முழு மருந்துச்சீட்டையும் மாற்றிப்போட்டு விடும். அது என்ன கூறுகிறதோ சரியாக அதிலேயே நாம் தரித்திருப்போம். தேவன் என்ன சொல்லியிருக்கிறாரோ, சரியாக அவ்விதமாகவே அதை விட்டு விடுவோம். 9இன்றைக்கு சபையானது போய் விட்டது. அவைகள் தூரமாக எங்கோவுள்ள திடீர் வெறி எழுச்சிக்குப் போய், அமைப்புகளையும், ஸ்தாபனங்களையும் ஏற்படுத்திக்கொண்டு, கிறிஸ்துவுக்குப் பிறகே ஜனங்களைக் கொண்டு போவதற்குப் பதிலாக, கோட்பாடுகளுக்குப் பின்னாக ஜனங்களைக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவைத் தவிர எந்தக் கோட்பாடும், அன்பைத் தவிர எந்த பிரமாணமும், வேதாகமத்தைத் தவிர எந்தப் புத்தகமும் எனக்கு வேண்டாம். சரியாக அதைத்தான் நாம் கொண்டிருக்கிறோம்: அது தேவனுடைய கோட்பாடாக உள்ளது, அதுதான் தேவனுடைய மருந்துச்சீட்டாகவும், பாவத்திற்கான தேவனுடைய மாற்று மருந்தாகவும் உள்ளது. அது நம்முடைய சுகமளித்தலுக்காக தேவனுடைய மாற்று மருந்தாக உள்ளது, நம்முடைய ஜீவியங்களில், நாம் வார்த்தையை எடுத்துக்கொள்ளுகையில், அது—அது நமக்கு வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வல்லமையாக உள்ளது. இப்பொழுது, அவர்கள் மறுமொழி கூறி, 'மோசேயினுடைய தேவன் எங்கே?' என்று திரும்ப உரக்கக் கத்திக் கொண்டிருப்பதை நாம் கண்டுகொள்கிறோம். மோசே தேவனோடு தரித்திருந்ததற்கும் மற்றும் காரியங்களுக்கும் காரணம் என்னவென்றால், தேவன் மோசேயுடைய மருந்துச்சீட்டை பின்பற்றிக் கொண்டிருந்தார், மோசே தேவனுடைய வார்த்தையை பின்பற்றிக் கொண்டிருந்தான். பேதுருவும், யாக்கோபும், யோவானும் ஒவ்வொரு முறையும் இலக்கை அடித்த விதத்துக்கான காரணம் என்னவென்றால், அவர்கள்-அவர்கள் வார்த்தையைப் பின்பற்றினார்கள். இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு... இலக்கும், சுடுதலும் மற்றும் அதைப் போன்ற காரியங்கள் எனக்குப் பிடிக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். என்னிடம் ஒரு சிறு, மாடல் 70 வின்செஸ்டர் துப்பாக்கி இருந்தது. நான் வெளியே நின்று, ஐம்பது கெஜம் தூரத்தில் என்னுடைய இலக்கை வைத்து, ஒரே துவாரம் வழியாக எட்டு குண்டுகளை கூட்டேன், ஐம்பது கெஜம் தூரத்தில் சுட்டேன். அந்தக் குண்டு சற்றே வெளியே போனது. நீங்கள் அதனோடு முட்டாளாக வேண்டியிருக்கிறது, அதனோடு tinker ஆக வேண்டியிருக்கிறது. அதைச் செய்வது எனக்குப் பிடிக்கும், அது ஒருவிதத்தில் என்னுடைய நரம்புகளை அமைதிப்படுத்தி விடுகிறது. அது வெளியே போய் விட்டது. என்னால் அதை உள்ளே வரச்செய்ய முடியவில்லை. அவைகளை எடுத்து, புதியதில் போடுவது தான் (rebedded) நமக்கு தேவையாயுள்ளது என்று நான் நினைத்தேன். 10நான் அதை வின்செஸ்டர் நிறுவனத்திற்கு திரும்ப அனுப்பி விட்டேன். அவர்கள் அதைத் திரும்ப அனுப்பி, அவர்கள், 'ஓ, சகோதரன் பிரன்ஹாமே, அல்லது திரு. பிரன்ஹாம் அவர்களே... அந்த வின்செஸ்டர் துப்பாக்கியானது மிகச்சிறந்த துப்பாக்கிகளின் ஒன்றாகும். It'll group a inch at fifty yards, at twenty-five yards, I mean, a inch at twenty-five yards' என்றனர், 'நீங்கள் எப்பொழுதும் பெற்றிருப்பதிலேயே மிகச்சிறந்த ஒன்றாக அது இருக்கிறது' என்றனர். வித்தியாசம் என்னவென்பதை நான் அறிந்து கொண்டேன். I knowed at fifty yards I drove eight straight tacks with it. எனவே அது தவறு என்பதை நான் அறிந்து கொண்டேன். இப்பொழுது, அதுதான் வழி... நான் அதைத் திரும்பவும் பெற்றுக்கொள்வது வரையில் என்னால் இளைப்பாறிக் கொண்டிருக்க முடியவில்லை. இப்பொழுது, அது அதே காரியத்தைச் செய்யும். இப்பொழுது, 'சபை அவ்வண்ணமாகக் கூறுகிறது, எனவே நாம் அப்படியே அதனோடு தரித்திருப்போம்' என்று அடித்து, splatter செய்ய விரும்புகிற இந்த ஜனங்களில் ஒருவன் நான் அல்ல. அப்போஸ்தலர்கள் தேவனுடைய வார்த்தையின் மூலமாகவும், தேவனுடைய கற்பனைகளின் மூலமாகவும், நாம் பெற்றிருக்கிற அதே பரிசுத்த ஆவியின் மூலமாகவும் தெய்வீக சுகமளித்தலை நோக்கியும், தேவனுடைய வல்லமையை நோக்கியும் tacksகளைச் சுட்டு, நாம் அதனோடு தரித்திருப்போமானால், அது அங்கே அவ்வண்ணமாகவே இருக்கிறது என்பதை நாம் அறிவோம், நாம் இலக்கை குறிபார்ப்பது (zero in) வரையில் அவ்விதமாகவே தரித்திருப்போம், அவ்வளவு தான், ஒருகாலத்தில் அது அதைச் செய்திருக்கிறது என்பது நமக்குத் தெரியும். 11'அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன' என்பதும், 'இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்' என்பது எப்படி? மறுபடியும் உயிர்த்தெழுந்து, என்றென்றுமாக ஜீவிக்கிற தேவன் எவ்வாறு மரிக்க முடியும்? தேவனிடம் எந்தக் கோட்பாடும் இல்லாதிருக்கும் போது, நாம் எவ்வாறு அதை ஒரு கோட்பாடாக ஆக்க முடியும்? தேவன் ஒரு நபராக இருக்கிறார். தேவன் தம்முடைய சபைக்குள் வாசம் செய்கிறார், நீங்கள் அவருடைய சபையாக இருக்கிறீர்கள். நீங்கள் மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியால் நிறைந்திருப்பீர்களானால், நீங்கள் தேவனுடைய சபையாக இருக்கிறீர்கள். தேவன் உங்களுடைய... க்குள் வாசம் செய்கிறார். அவர் உங்களோடு கூடாரம் போட்டு வாசம் பண்ணுகிறார். தேவன் இறங்கி வந்து, மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணின போது, அவர் என்ன செய்தார்? அவர்—அவர் மனிதர்கள் மத்தியில் தம்முடைய கூடாரத்தை விரிக்கிறார். மனிதன் நிச்சயமாக அவரைப்போல ஆக வேண்டும் என்பதற்காக, அப்படி ஆகும்படிக்கு, அவர்-அவர் தம்முடைய castஐ தேவனிடமிருந்து மனிதனிடத்திற்கு சேர்த்து இணைத்தார். ஓ, அவருடைய கிருபையின் மூலமாக நான் அவராக ஆகும்படிக்கு, அவர் நானாக ஆனார். ஓ, என்னவொரு மகத்தான காரியம். அது என்னவென்று நாம் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டோம். ஜனங்கள் இன்று, 'தேவன் எங்கே?' என்று சத்தமிடுவதில் வியப்பொன்றுமில்லை. வார்த்தைக்குத் திரும்புங்கள். தொடக்கத்துக்குத் திரும்புங்கள். 12ஆதியிலே அவர் தம்முடைய சீஷர்களிடம், 'நீங்கள் உலகமெங்கும் போய், சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்' என்றார். அதுதான் அதுவாக இருந்தது. அந்த அதே வார்த்தைக்குத் திரும்பி வாருங்கள், அது அதே காரியத்தை பிறப்பிக்கும். அவர்கள் அந்த வார்த்தையைப் பின்பற்றினார்கள், அது இலக்கை குறிபார்த்து, drove the tacks. ஒவ்வொரு tackம், தேவன் செய்திருக்கிற ஒவ்வொரு வாக்குத்தத்தமும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. நாம் அந்த அதே வார்த்தைக்குத் திரும்பி வருவோமானால், அது அதே tacksகளை drive செய்து, அதே அற்புதங்களைச் செய்து, அதே காரியங்களை நடப்பித்து, அதே ஜீவனை உண்டுபண்ணி, அதே சிருஷ்டியை உருவாக்கி, மரித்தோரை உயிரோடெழுப்பி, வியாதியஸ்தர்களைச் சுகமாக்கி, பிசாசுகளைத் துரத்தி, தரிசனங்களையும், தீர்க்கதரிசனங்களையும் காணும். நாம் அதே காரியத்துக்குத் திரும்பி வருவோமானால், அந்த tackஐ droveபண்ணின அதே சுவிசேஷமாக அது உள்ளது. துப்பாக்கியானது முதலில் இருந்த அதே நிலைக்கு அதை மறுபடியும் கொண்டு வந்து, அதை முழுவதும் அசைக்காமல் (vibrations) வையுங்கள், அப்போது அந்தத் துப்பாக்கிக் குண்டு சரியாகவும் நேராகவும் இலக்கை குறிபார்க்கும். நாம் அவிசுவாசமாகிய குலுக்கங்கள் எல்லாவற்றையும் நம்மை விட்டு அகற்றிப் போடுவோமானால், தேவனுடைய வார்த்தையானது அது முதலில் இருந்தது (போலவே) அப்படியே சரியாக இலக்கைக் குறிபார்க்கும். அது முற்றிலும் சரியே. அது ஒவ்வொரு முறையும் இலக்கை குறிபார்க்கும். அது ஒருகாலத்தில் அவ்வாறு செய்தது; அது மறுபடியும் அதைச் செய்யும். ஒரு கோட்பாட்டைக் கொண்டோ, அல்லது ஏதோவொன்றைக் கொண்டோ திருப்தியடைந்து விடாதீர்கள். வார்த்தையானது துல்லியமாக இலக்கை குறிபார்க்கும் மட்டுமாக சரியாக அங்கேயே தரித்திருங்கள். 13நம்முடைய கர்த்தராகிய இயேசுவை அவருடைய தாயாரும் தகப்பனாரும், அல்லது, வளர்ப்புத் தகப்பனாரும் பெந்தெகோஸ்தே பண்டிகைக்கு அழைத்துச் சென்ற போதுள்ள நேரத்தை அது எனக்கு நினைவூட்டுகிறது. அவர்கள் மூன்று நாள் பிரயாணம் போய் விட்டார்கள், இறுதியில் அவர்கள் அவரை தவற விட்டு விட்டார்கள். அவர்களால்-அவர்களால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்பொழுது அந்தவிதமாகத்தான் சபையும் போய் விட்டிருக்கிறது. அது இன்னும் அதிக (தூரம் வழிதவறிப்) போய் விட்டது... அது ஏறக்குறைய இரண்டாயிரம் வருட பிரயாணம் செய்து, அவரைத் தவற விட்டிருக்கிறது. இதோ அது இருக்கிறது. அவருடைய வருகையைக் குறித்த அடையாளங்கள் எல்லா இடங்களிலும் தோன்றிக் கொண்டிருக்கின்றன, அவர்களோ, 'தேவன் எங்கே? தேவன் எங்கே? அவருக்கு ஏன்னவானது?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கவனித்தீர்களா? மரியாளும் யோசேப்பும் தங்கள் உறவினர்கள் மத்தியில் அவர்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்கள் அவரைக் கண்டுபிடிக்கவில்லை. இன்று மேதொடிஸ்டுகள் அவரை உடையவர்களாக இருக்கிறார்களா என்றும், பாப்டிஸ்டுகள் அவரை உடையவர்களாக இருக்கிறார்களா என்றும், பிரஸ்பிடேரியன்களோ அல்லது லூத்தரன்களோ அவரை வைத்திருக்கிறார்களா என்றும் காணும்படியாக நாம் திரும்பிச் செல்கிறோம். இல்லை, ஐயா, அவர்கள் அவரைக் கண்டுபிடிக்கவில்லை. இன்றைக்கும் நாம் அவரைக் கண்டுபிடிக்க மாட்டோம். நாம் திரும்பிச் சென்று, அந்தப் பழமையான மரித்துப் போன ஸ்தாபனங்களில் ஒன்றை எவ்வளவு தான் ஆராய்ந்து பார்த்தாலும், நாம் அதை ஒருபோதும் செய்ய மாட்டோம். 14அவர்கள் அவரை எங்கே கண்டுபிடித்தார்கள்? அவர்கள் அவரை எங்கு விட்டு விட்டார்களோ அங்கு தான் அவரைக் கண்டுபிடித்தார்கள். அல்லேலூயா! நான் ஒரு பரிசுத்த உருளையன் என்று நினைக்கலாம்; நான் பரிசுத்த உருளையன் தான் என்று நினைக்கிறேன். அவர்கள் கண்டுபிடித்தது போன்றே நீங்களும் அவரைக் கண்டுபிடிப்பீர்கள். அவர்கள் அவரை எங்கு விட்டார்களோ, அங்கு தான் அவரைக் கண்டுபிடித்தார்கள். அங்கு தான் சபையும் அவரைக் கண்டுபிடிக்கும். அவர்கள் எங்கு அவரை விட்டார்கள்? பெந்தெகோஸ்தே பண்டிகையில். சபையானது அவரை எங்கே கண்டுபிடிக்கும்? பெந்தெகோஸ்தே பண்டிகைக்குத் திரும்பிப் போவதன் மூலமாகத்தான், அப்போஸ்தலர்களுடைய உபதேசங்கள் மற்றும் அதைப் போன்ற மற்றவைகளிலிருந்து அவர்கள் விலகிச்சென்ற போது, அங்கு தான் அவர்கள் அவரை விட்டு விட்டார்கள். அங்கே பின்னால் அந்த முற்காலங்களில், அவர்கள் அதிலிருந்து தூரமாக விலகிச்சென்று, தங்களுடைய சொந்த கோட்பாடுகளை உண்டாக்கி, நிக்கோலா உபதேசத்தைத் துவங்கி, கத்தோலிக்க சபையை நிறுவி, கிறிஸ்தவ மதம் என்று அழைக்கப்படும் ஒரு மதத்தை ஸ்தாபித்தார்கள். அங்கிருந்து அவர்கள் ஸ்தாபித்து, காரியங்களை இடித்துப்போட்டு, கிறிஸ்தவர்கள் எல்லாரையும் கோட்பாடுகளுக்குள்ளும் மற்றவைகளுக்குள்ளும் கொண்டு வந்து, அவர் வந்த போது கண்டுகொண்ட விதமாகவே, அது அதே கூட்டமாக இருக்கும் அளவுக்கு அதை முழுவதும் குழப்பி விட்டனர். அது சரியே. முற்காலத்து ஆதியிலே, அவர் வல்லமையுள்ளவராய், அவர் மரித்தோரை உயிரோடெழுப்பினவராய், வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தினவராய், பிசாசுகளைத் துரத்தினவராய் இருந்த போது, அங்கே தான் அவரை நாம் விட்டு விட்டோம்; அது சரியாக ஆதிக்குத் திரும்பிச் செல்லுதலாக உள்ளது, அங்கு தான் நாம் அவரை விட்டு விட்டோம். 15அவர்கள், 'அவர் எங்கே? அவர் மெதோடிஸ்களோடு கூட இருக்கிறாரா? அவர் பாப்டிஸ்டுகளோடு கூட இருக்கிறாரா?' என்றும், 'அவர் பெந்தெகோஸ்தேயினரோடு இருக்கிறாரா?' என்றும் கூட கேட்கலாம். இல்லை, ஐயா... திரும்பிச் செல்லுங்கள். பெந்தெகோஸ்தே அமைப்புக்கு அல்ல, பெந்தெகோஸ்தே ஸ்தாபனத்திற்கும் அல்ல, அது ஒரு பெயர் தான். பெந்தெகோஸ்தேவை யாரால் ஸ்தாபிக்க முடியும்? என்னிடம் சொல்லுங்கள். பெந்தெகோஸ்தே என்பது ஒரு ஸ்தாபனம் அல்ல. அதைப் பெற்றுக்கொள்ள விரும்புகிற எந்த விசுவாசிக்கும் பெந்தெகோஸ்தே என்பது ஒரு அனுபவமாக உள்ளது. அந்த அனுபவத்துக்குத் திரும்புங்கள், ஒரு ஸ்தாபனத்திற்குத் திரும்புவதல்ல, ஆனால் ஒரு அனுபவத்திற்குத் திரும்புதல். பெந்தெகோஸ்தே என்பது ஒரு அனுபவமாக உள்ளது. நான் உங்களிடம் ஒரு காரியத்தைக் கூறட்டும். இன்று பெந்தெகோஸ்தே சபை கொடுக்கிற கனியை கவனியுங்கள், அப்போது அவைகள் ஆதியிலிருந்து துவங்கப்பட்டவைகள் அல்ல என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள்: அவர்கள் தர்க்கம் பண்ணிக்கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும், மிக அதிகமாய் கவலைப்பட்டுக்கொண்டும், அமைதியில்லாமல் சஞ்சலத்தோடும், குழப்பமடைந்தவர்களாகவும், இதற்காக இழுத்துக்கொண்டும், அதற்காக இழுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இயேசு, யோவான் 14, அல்லது யோவான் 15ம் அதிகாரத்தில், 'நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்' என்று கூறியிருக்கிறார். அது சரியா? 16இப்பொழுது, விவசாயிகளே, டெக்ஸôûஸச் சேர்ந்தவர்களும், லூசியானாவைச் சேர்ந்தவர்களுமாகிய நீங்கள், இங்கேயுள்ள நீங்கள் யாராகவும் இருக்கலாம், நல்ல அனுபவசாலிகளாகிய எவரும், ஒரு திராட்சச்செடி வளருவதை நீங்கள் எப்பொழுதாவது கண்டிருந்தால், அந்தத் திராட்சச்செடி கனிகொடுப்பதில்லை என்பதை அறிவீர்கள். அந்தத் திராட்சச்செடியின் கொடிகள் தான் கனிகொடுக்கின்றன, ஆனால் அது தன்னுடைய ஜீவனை திராட்சச்செடியிலிருந்து பெற்றுக்கொள்கிறது. இயேசு தான் நம்முடைய ஜீவனின் மூலகாரணர். ஆம், ஐயா. இப்பொழுது, நாம் கவனிப்போம், அப்படியானால், இயேசு நம்முடைய ஜீவனின் மூலகாரணராக இருப்பாரென்றால், அவர் தான் உண்மையான திராட்சச்செடியாக இருக்கிறார். திராட்சச்செடியிலிருக்கும் அதே ஜீவன் தான் கொடியிலும் இருக்கிறது. அந்தத் திரட்சச் செடியிலிருந்து முதலாவது கொடி வளர்ந்து, அந்த கொடியானது அதன்மேல் ஒரு கொத்து திராட்சப் பழங்களைக் கொண்டு வருகிறது. எப்பொழுதாவது வேறொரு கொடி அதில் வளருமானால், அதுவும் ஒரு கொத்து திராட்சப்பழங்களாக இருக்கும். அதில் வேறொரு கொடி வளருமானால், அதுவும் ஒரு கொத்து திராட்சப் பழங்களாக இருக்கும். அந்தத் திராட்சச் செடியின் முடிவு மட்டுமாக, அது அதே வகையான கொடிகளாகவே இருக்கும். ஓ தேவனே. இப்பொழுது, என்னுடைய அரை மணி நேரமும் எனக்கு வேண்டும்; அதற்கு வருவதற்கு அப்படியே ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். ஆமென். அந்தத் திராட்சச்செடியானது ஒவ்வொரு முறையும் ஒரு கொடியை வளரச் செய்யும் போது, அது முதலாவது கொடியைப் போன்றே இருக்கும். ஏன்? காரணம் என்னவென்றால் அந்தத் திராட்சச் செடிக்குள் இருக்கும் அந்த ஜீவனானது அதே விதமான கொடியையே வளரச் செய்யும். முதலாவது திராட்சச்செடியானது திராட்சப் பழங்களை கொண்டு வருமானால், அடுத்தது பூசணிக்காயை கொண்டு வராது. அடுத்தது சிட்ரஸ் பழத்தைக் கொண்டு வராது. பிறகு, சற்று கழிந்து, அதைப்போன்று தொடர்ந்து வருகையில், அது அவ்விதமாகச் செய்யாது. 17உண்மையான திராட்சச் செடியானது ஒரு கிளையைத் தோன்றச் செய்யுமானால்... இயேசு தான் முதலாவது கொடி, அல்லது, முதலாவது திராட்சச்செடியாக இருக்கிறார். (அதிலிருந்து) பிறப்பித்த முதலாவது கிளையானது, அவர்கள் அதற்குப் பிறகே அப்போஸ்தலர் நடபடிகளின் புஸ்தகத்தை எழுதினார்கள். அது சரிதானா? பெந்தெகோஸ்தே சபை, உண்மையான பெந்தெகோஸ்தே சபையானது, அது விசுவாசிகளைப் பின்தொடர்ந்து வருகிற அடையாளங்களைக் கொண்டும், அற்புதங்களைக் கொண்டும், அப்போஸ்தலர் நடபடிகளின் புஸ்தகத்தை எழுதினது. அந்த உண்மையான திராட்சச்செடியானது வேறொரு உண்மையான திராட்சச்செடியைத் தோன்றச் செய்யுமானால், அதற்குப் பின்னால் அப்போஸ்தலருடைய நடபடிகளின் புஸ்தகத்தை அவர்கள் எழுதுவார்கள். ஆம், ஐயா. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, அரிசோனாவிலே, ஒரு மனிதனுடைய முற்றத்தில் இருந்த ஒரு மரத்தைப் பார்த்துக் கொண்டிந்தேன்: அது ஒரு சிட்ரஸ் மரம். அதில் ஒரே மரத்தில் ஒன்பது வெவ்வேறு விதமான கனிகள் இருந்தன. அது அவ்விதமாக இருந்தது. அவைகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமான கனியாக இருந்தது. துவக்கத்தில் அது ஒரு ஆரஞ்சு மரமாக இருந்தது, ஆனால் அதில் மாதுளம்பழங்களும் இருந்தன; அது-அதில் எலுமிச்சை பழங்களும், திராட்சப் பழங்களும், வெவ்வேறு விதமான எல்லா சிட்ரஸ் கனிகளும் இருந்தன. ஏன்? அவைகள் அங்கே ஒட்டுபோடப்பட்டிருந்தன. அவைகள் அந்த மரத்தினுடைய ஜீவனுக்கு அப்பால் ஜீவித்துக் கொண்டிருந்தன, ஆனால் அவைகள் என்னவாக இருந்ததோ அதைத் தவிர வேறொன்றையும் அவைகளால் கொண்டு வர முடியவில்லை. அவைகள் ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு வர முடியவில்லை, ஏனென்றால் அவைகள் ஒட்டுப்போடப்பட்ட திராட்சச்செடியாக இருந்தன. ஆனால் அந்த மரமானது தன்னிலிருந்து ஒரு உண்மையான கிளையை தோன்றச் செய்யும் ஒவ்வொரு முறையும், அது ஒரு ஆரஞ்சு மரமாக இருந்து, ஆரஞ்சு பழங்களை அது கொடுத்தது. இன்று அவ்விதமாகத்தான் உள்ளது. நாம் உண்மையான திராட்சச்செடிக்குள் மெதோடிஸ்டுகளாகவும், பாப்டிஸ்டுகளாகவும், பிரஸ்பிடேரியன்களாகவும் ஒட்டுபோடப்பட்டு, அதனுடைய பலத்திற்கு வெளியே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது கோட்பாட்டையும் ஸ்தாபனத்தையும் தவிர வேறொன்றையும் பிறப்பிக்காது. ஆனால் அந்தத் திராட்சச்செடியானது எப்பொழுதாவது வேறொரு கிளையைத் தோன்றச் செய்யுமானால், அது பெந்தெகோஸ்தே நாளில் இருந்தது போன்று அப்படியே சரியாக, அது எந்த ஸ்தாபனத்தையும் உடையதாயிராமல் (interdenominational), பரிசுத்த ஆவியோடு கூடிய வல்லமையோடிருக்கும், அதுதான் ஆதிக்குத் திரும்பிச் செல்லுதல். ஆமென். நான் நிறுத்தி விடுவது நல்லது. ஆமென். 18அந்தத் திராட்சச் செடியானது எப்பொழுதாவது வேறொரு கொடியை வளரச்செய்யுமானால், அது அப்படியே துவக்கத்தில் இருந்தது போன்றே இருக்கும். நாம் அதற்குள்ளே எல்லா விதமான சபை கோட்பாடுகளையும் ஒட்டுபோட்டிருக்கிறோம்: பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு, பெந்தெகோஸ்தேகாரர்கள், பிரஸ்பிடேரியன், லூத்தரன், பாப்டிஸ்டு; அவர்கள் ஒவ்வொருவருமே பாப்டிஸ்டு கனியையும், மெதோடிஸ்டு கனியையும், பெந்தேகோஸ்தே கனியையும், மேலும் மற்ற எல்லா கனியையும் பிறப்பிக்கிறார்கள். ஆனால் அது திரும்பி வந்து, அந்தத் திராட்சச் செடியானது எப்பொழுதாவது வேறொரு உண்மையான கொடியை தோன்றச் செய்யுமானால், அது பரிசுத்த ஆவியானவரின் கனியைப் பிறப்பிக்கும். ஆமென். அது... அவர்கள், 'நல்லது, நாங்கள் மெதோடிஸ்டுகள்' என்கிறார்கள். 'ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.' 'நாங்கள் பாப்டிஸ்டுகள்.' 'ஆதிமுலாய் அப்படியிருக்கவில்லை.' 'நாங்கள் பிரஸ்பிடேரியன்கள்.' 'ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.' 'அந்நிய பாஷைகள் பேசுவதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.' 'ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.' 'எங்கள் சபையிலே தெய்வீக சுகமளித்தலில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது.' 'ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.' அல்லேலூயா! நமக்கு இன்று என்ன தேவையாயிருக்கிறது என்றால், மறுபடியும் தொடக்கத்திற்குத் திரும்பிச் செல்கிற ஏதோவொன்றாகும், துவக்கத்துக்குத் திரும்பிச் செல்லுதல். அல்லேலூயா! என்னுடைய நேரம் முடிந்து விட்டது. நாம் ஜெபம் செய்வோமாக. 19ஓ, கர்த்தராகிய இயேசுவே, சபையானது ஆதிக்குத் திரும்பிப் போகிற நாளைக் காணும்படி நான் ஜீவிப்பேனாக. இதை அருளும், கர்த்தாவே. இந்தக் காலையில் இந்தச் சிறு இடத்தை நிறைத்தருளும். கர்த்தாவே, இங்கேயுள்ள இந்தச் சிறு மேய்ப்பரையும், இந்த மற்றவர்களையும் அபிஷேகம் செய்யும். உமது மகிமையை எங்களுக்குத் தாரும். உமது இரக்கத்தை எங்களுக்குத் தாரும். கர்த்தாவே, இங்கே ஒரு கூட்டத்தை எங்களுக்குத் தாரும். நாங்கள் மற்ற காரியங்களைக் குறித்து மறந்து விட்டு, ஆதிக்குத் திரும்பிப் போவோமாக, எங்களுடைய எஜமான் இந்தக் காலையில் எங்களுடைய இருதயங்களுக்குள் பேசுவதை நாங்கள் அறிவோம். இந்த ஒட்டு போடப்பட்ட திராட்சச் செடிகளை அங்கிருந்து அகற்றிப் போடுவீராக. அவிசுவாசத்திலிருந்து உங்களை நீங்களே வேறுபிரித்துக் கொள்ளுங்கள். துவக்கத்துக்கு (ஆதிக்கு) திரும்பிச் செல்லுங்கள். அங்கே தான் அப்படியிருந்தது. மேலும், கர்த்தாவே, ஆதிமுதற்கொண்டு அப்படியிருந்த ஒவ்வொன்றும் எங்களுக்கு வேண்டும். கர்த்தாவே, எங்களுடைய அனுபவங்கள், இந்தக் காலை வரையில் நாங்கள் இன்னுமாக அதை எப்பொழுதாவது கொண்டிருந்தோமானால்... ஆதியிலிருந்த ஆவியினுடைய அனுபவத்தை ஒருபோதும் கொண்டிராமலும், ஆதியிலே ஊற்றப்பட்ட அந்த அதே ஆவியைப் பெற்றிராமலும் இருக்கும், யாராவது ஒருவர் இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பாரானால், நாம் ஏன் அதற்கு மாற்றாக ஒரு பதிலீட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்? நாம் ஏன் மதவெறித்தனமான ஏதோவொன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்? பெந்தெகோஸ்தே ஆகாயம் முழுவதும் மிகவும் உண்மையான காரியங்களால் நிறைந்திருக்கும் போது, நாம் ஏன் ஏதோவொரு வெறித்தனமானதும், குளிர்ந்து போனதும், சம்பிரதாயமானதும், முக்கியத்துவமற்றதுமான கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஏன் அதற்கு மாற்றான ஒரு பதிலீட்டை ஏற்றுக்கொள்கிறீர்கள்? கர்த்தாவே, நாங்கள் ஆதிக்குத் திரும்பிச் சென்று, அவர்கள் ஆதியிலே பெற்றுக்கொண்டது போல் அதைப் பெற்றுக்கொண்டு, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை ஆகிய அதே கனியைப் பிறப்பிக்கிற அதே கிரியைகளையும், அதே அடையாளங்களையும், அற்புதங்களையும் கொண்டிருப்போமாக. தேவனே, இதை அருளும். பிதாவே, எங்களைக் கேட்டருளும், நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தச் சிறு சபையையும் இந்த எழுப்புதலையும் உம்மிடத்தில், உமது கரத்தில் ஒப்புவிக்கிறோம். ஆமென். 20தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. துரிதமாய் இருக்க வேண்டியிருப்பதை நான் வெறுக்கிறேன், ஆனால் இப்பொழுது 11 மணி தாண்டி விட்டது. நான் இன்றிரவு உங்களைக் காண்பேன். நன்றி...